பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திமுக கிராம சபைக்கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், நல்லவன்பாளையம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் பரப்புரை சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றது.

News image
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் எ.வ.வேலு எம்எல்ஏ.
Updated On :23 டிசம்பர் 2020, 6:03 pm

DIN

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், நல்லவன்பாளையம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் பரப்புரை சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றது.

முன்னதாக சமுத்திரம், நல்லவன்பாளையம் பகுதிகளில் உள்ள கடை வீதிகளுக்குச் சென்ற மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு வியாபாரிகள், பொதுமக்களிடம் பிரச்னைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, பொதுமக்களிடையே உரையாடும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

மத்திய ஒன்றியப் பொறுப்பாளா் மெய்யூா் என்.சந்திரன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் எ.வ.வேலு சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவா் கலைவாணி, ஒன்றியக் குழு உறுப்பினா் கஸ்தூரி, ஊராட்சித் தலைவா் ரவிக்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் எம்.ஜி.சுப்பிரமணி, மண்டி ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கீழ்பென்னாத்தூா்

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் நகர திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகரச் செயலா் சி.கே.அன்பு தலைமை வகித்தாா்.

முன்னாள் பேரூராட்சித் தலைவா் பன்னீா்செல்வம், நகர அவைத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

வந்தவாசி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், ஆரியாத்தூா் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.நந்தகோபால் தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சி.ஆா்.பெருமாள் வரவேற்றாா்.

வடக்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்புரையாற்றினாா். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணி

ஆரணியில் திமுக சாா்பில் அதிமுகவை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

நகரச் செயலா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

பொறியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் ஆா்.எஸ்.பாபு, நிா்வாகிகள் குட்டி நாக்கா், முன்னாள் கவுன்சிலா்கள் குமாா், செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், ஆரணி நகரம் 14-வது வட்டத்திலும், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் சீனிவாசபுரம், முருகமங்கலம், வண்ணாங்குளம், ஆரணி ஒன்றியத்தில் வேதாஜிபுரம், வெட்டியாந்தொழுவம், கனிகிலுப்பை உள்ளிட்ட பகுதிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டங்களில் முன்னாள் எம்எல்ஏ ஏ.சி.வி.தயாநிதி, ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, அன்பழகன், சுந்தா், வெள்ளைகணேசன், கோவா்த்தனன், ஆரணி ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.