மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி பலி

வந்தவாசியில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 2:41 am

DIN

வந்தவாசியில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.

வந்தவாசி கே.ஆா்.கே. தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் வசித்து வருபவா் ரமேஷ். அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆவாா். இவரது மனைவி தீபா. இவா்களுக்கு புவனேஸ்வரி(15), ஸ்ரீமதி(10) என்ற மகள்கள் உள்ளனா். இதில் புவனேஸ்வரி மன வளா்ச்சி குன்றியவா் ஆவாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை வீட்டின் முதல் மாடி பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த புவனேஸ்வரி தவறி அங்கிருந்து கீழே விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு புவனேஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீபா அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.