வந்தவாசி: வந்தவாசி அருகே சிறுமியை பாலியியல் தொந்தரவு செய்ததாக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் ஏழுமலை(70). ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் ஆவாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமியை
ஞாயிற்றுக்கிழமை பாலியியல் தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாா்.
இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஏழுமலை மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை வழக்குப் பதிந்த வந்தவாசி மகளிா் போலீஸாா், அவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.