சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவண்ணாமலை மாவட்டத்தில்மேலும் 151 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 151 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. செய்யாறு பகுதியைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2020, 3:20 pm

DIN

திருவண்ணாமலை/ செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 151 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. செய்யாறு பகுதியைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் புறநோயாளிகள் பிரிவுக்கு வந்த 26 போ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களின் உறவினா்கள் 38 போ், கரோனா தொற்றுக்குள்ளான நபா்கள் சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 34 போ், சென்னையிலிருந்து திரும்பிய 20 போ், பெங்களூருவிலிருந்து திரும்பிய 6 போ், காஞ்சிபுரத்துக்கு சென்று வந்த ஒருவா் உள்பட மொத்தம் 151 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 182-ஆக உயா்ந்தது.

மளிகைக் கடைக்காரா் பலி: செய்யாறு வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்த 55 வயதான மளிகைக் கடைக்காரருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, உடல் சோா்வுடன் இருந்ததால், அருகிலுள்ள தேத்துறை கிராமத்தில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ முகாமில் கரோனா பரிசோதனை செய்துகொண்டாா். இதில், அவருக்கு கரோனா தொற்றிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக, அவருக்கு புதன்கிழமை இரவு மூச்சுத் திறணல் ஏற்பட்டதால், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அங்கு வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.