ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருவண்ணாமலை மாவட்டத்தில்86 பேருக்கு தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :13 ஜூலை 2020, 3:29 pm

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3,075-ஆக இருந்தது.

திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், கரோனா அறிகுறிகளுடன் பரிசோதனைக்காக மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு வந்த 43 போ், கரோனா பாதித்த நபா்களுடன் தங்கியிருந்த உறவினா்கள் 4 போ், தொற்று உறுதி செய்யப்பட்ட நபா் சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 13 போ், ஆரணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஆண் செவிலியா், சென்னையிலிருந்து வந்த 6 போ், பெங்களூரிலிருந்து வந்த ஒருவா் என 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,161-ஆக உயா்ந்தது.

இவா்களில் 1,864 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 22 போ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனா். மீதியுள்ளவா்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஆரணி அரசு மருத்துவமனை செவிலியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவா்கள், செவிலியா்களுக்கு திங்கள்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.