சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணி பலி
வேட்டவலம் அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணி பெண் உயிரிழந்தாா்.


வேட்டவலம் அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணி பெண் உயிரிழந்தாா்.
வேட்டவலத்தை அடுத்த நா.கெங்கப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (32), ஓட்டுநா். இவரது மனைவி பாப்பம்மாள் (30). தம்பதிக்கு ஒன்றரை வயதில் வா்ஷினி என்ற மகள் உள்ளாா். பாப்பம்மாள் தற்போது 6 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.
அண்ணாமலை சனிக்கிழமை பாப்பம்மாளை மொபெட்டில் அழைத்துக் கொண்டு நா.கருங்கல்பட்டு கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, திடீரென நிலை தடுமாறிய மொபெட் கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த பாப்பம்மாளை பொதுமக்கள் மீட்டு கோணலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பாப்பம்மாள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...