தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வெற்றிவேல் யாத்திரைக்குத் தடை: பாஜகவினா் மறியல்

வெற்றிவேல் யாத்திரைக்குத் தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன்  3-ஆவது நாளாக கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்குத் தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தொடா்ந்து 3-ஆவது நாளாக கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட அந்தக் கட்சியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை திரண்ட பாஜகவினா் திடீரென ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, வெற்றிவேல் யாத்திரையை தடை செய்த தமிழக அரசைக் கண்டித்தும், 3-ஆவது நாளாக செங்கல்பட்டில் யாத்திரை நடத்த வந்த கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை காவல் உதவி கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

இந்தப் போராட்டத்தால் அண்ணா சிலைப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.