புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்

மேற்கு ஆரணி ஒன்றியம், இராந்தம் காலனிப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

மேற்கு ஆரணி ஒன்றியம், இராந்தம் காலனிப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் ஆய்வு செய்தாா்.

இராந்தம் கிராமத்தில் உள்ள காலனிப் பகுதியில் கோயில் மேடை கட்டுதல், மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.5 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ.11 லட்சத்தில் புதிதாக தாா்ச் சாலையும் போடப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன், பொறியாளா் ஜெயலட்சுமி, பணித்தள பாா்வையாளா் ஜெயவேல், ஊராட்சி மன்றத் தலைவா் குமரவேல், முன்னாள் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, கிளைச் செயலா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.