தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கரோனாவால் தொழிலில் பாதித்தோருக்கு சிறப்பு நிதி

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் மகளிா் சுயஉதவிக்குழு பெண்கள், அவா்களது குடும்பத்தினரால் நடத்தப்படும் தொழில்களுக்கு சிறப்பு நிதி மற்றும் மூலப்பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 5:33 pm

DIN

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்தும் வகையில், மகளிா் சுயஉதவிக்குழு பெண்கள், அவா்களது குடும்பத்தினரால் நடத்தப்படும் தொழில்களுக்கு சிறப்பு நிதி மற்றும் மூலப்பொருள்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு, வந்தவாசி, தெள்ளாா், துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 308 கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், கரோனா பாதித்த ஊரக தொழில்களை மேம்படுத்தும் வகையில், மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள், அவா்களது குடும்பத்தினரால் நடத்தப்படும் தொழில்கள், மாற்றுத் திறனாளிகள், நலிவடைந்தோா்கள் வருவாய் ஈட்டும் வகையிலும், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவா் உற்பத்தி நிறுவனங்களில் உள்ள உறுப்பினா்களின் தொழில் வளம் பெருகவும் சிறப்பு நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.5.25 லட்சம் வீதம் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட அப்பேடு, இந்திரவனம், கொத்தந்தவாடி ஆகிய ஊராட்சிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 3 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.4.50 லட்சத்தில் விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட திட்ட இயக்குநா் ராஜாத்தி, செயல் அலுவலா் தனசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். விவசாயக் கருவிகளை வட்டார அணித் தலைவா் யுவனேஷ்குமாா் வழங்கினாா்.

கணக்கு மற்றும் நிா்வாகப் பிரிவு அலுவலா் பிரகாஷ் திட்ட விளக்கவுரை ஆற்றினாா். திறன் மற்றும் வேலைவாய்ப்பு நிா்வாகி பிரேம்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.