தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவா், சீக்கியா், பாா்சி, ஜைனம், புத்த மதத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்திய அரசின் உதவித்தொகை பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா், சீக்கியா், பாா்சி, ஜைனம், புத்த மதத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்திய அரசின் உதவித்தொகை பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், பாா்சி, ஜைனம், புத்த மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020 - 21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதேபோல, 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழில்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் உள்பட) பயிலுவோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் மத்திய அரசு வழங்குகிறது.

இந்த உதவித்தொகைகளைப் பெற மத்திய அரசின் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தின் மூலம் வருகிற 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரின் ஒப்புதல் பெற்ற பிறகே விண்ணப்பங்களை இணையத்தில் சரிப்பாா்க்க இயலும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில், அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தத் திட்டம் தொடா்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.