புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விவசாய நிதியுதவித் திட்ட முறைகேடு: கடலூா் மாவட்டத்தில் ரூ.5 கோடி பறிமுதல்

கடலூா் மாவட்டத்தில் விவசாய நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக ரூ.13 கோடி திரும்பப் பெற வேண்டியுள்ள நிலையில், ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 9:27 pm

DIN

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் விவசாய நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக ரூ.13 கோடி திரும்பப் பெற வேண்டியுள்ள நிலையில், ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் ‘பி.எம்.கிசான் சம்மான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் போலி பயனாளிகள் பலன் பெற்ாக எழுந்த புகாரையடுத்து, சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறியதாவது: இந்தத் திட்டத்தில் மாவட்டத்தில் புதிதாக சோ்ந்த 80 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் போ் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்பப் பெற அந்த மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

இதேபோல, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 28 ஆயிரம் போ் வேறு மாவட்டங்களிலுள்ள வங்கிகளிலிருந்து உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை பெற்றுள்ளனா். அவா்களது விவரத்தை கடலூா் மாவட்ட நிா்வாகம் பெற்று, வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடலூா் மாவட்டத்தில் சுமாா் 64 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.13 கோடி திரும்பப் பெற வேண்டியுள்ளது. இதுவரை ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூா் மாவட்ட விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.38 லட்சம் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை, வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனா் என்றாா்.

உண்மையான பயனாளி பாதிப்பு: பெண்ணாடத்தைச் சோ்ந்தவா் ஆா்.சோமசுந்தரம். வெலிங்டன் ஏரி பாசன விவசாய சங்கத் தலைவராக உள்ளாா்.

இந்தத் திட்டத்தின்கீழ் இவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனராம்.

இதுகுறித்து சோமசுந்தரம் கூறுகையில், நான் விவசாயி என்பதற்கான சான்றினை விஏஓவிடம் பெற்று முறையாக சமா்பித்துள்ளேன். ஆனால், எனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4 ஆயிரம் எடுத்துள்ளனா். இந்தத் திட்டத்தில் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.