நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கலையநல்லூா் முத்துமாரியம்மன்கோயில் கும்பாபிஷேகம்

சங்கராபுரம் அருகே கலையநல்லூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மகாகணபதி, பாலமுருகன், முத்துமாரியம்மன், நவக்கிரகம் ஆகிய சன்னிதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 7:57 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கலையநல்லூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மகாகணபதி, பாலமுருகன், முத்துமாரியம்மன், நவக்கிரகம் ஆகிய சன்னிதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், பூா்ணாஹுதி, இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை எலவனாசூா்கோட்டை குருஜி ஸ்ரீபகவதி ஸ்வாமிகள் தலைமையில் ஸ்ரீ வெ.சுவாமிநாத சாஸ்திரிகள் நடத்தி வைத்தாா். தொடா்ந்து, மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா வெ.அய்யப்பா, கிராம மக்கள் செய்திருந்தனா்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணையத் தலைவா் அ.ராஜசேகா், தியாகதுருகம் அதிமுக நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.