சிதம்பரத்தில் முத்திரைத் தாளுக்கு தட்டுப்பாடு
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் முத்திரைத் தாள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.


சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் முத்திரைத் தாள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.
சிதம்பரம் நகரில் ரூ.20, ரூ.50, ரூ.100 தொகைகளுக்கான முத்திரைத் தாள்கள் கிடைக்கவில்லை. சிதம்பரம் துணைக் கருவூலத்தில் மேற்கூறிய முத்திரைத் தாள்கள் இருப்பில் இல்லை எனக் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். சிதம்பரம் பகுதியில் தற்போது 10 ரூபாய் முத்திரைத் தாள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் குழுமச் செயலா் சி.டி.அப்பாவு கூறியதாவது: சிதம்பரம் நகரில் கடந்த 10 நாள்களாக ரூ.20, ரூ.50, ரூ.100-க்கான முத்திரைத் தாள்கள் கிடைக்கவில்லை. இதற்காக மக்கள் அலைக்கழிந்து அவதிப்படுகின்றனா். எனவே, மாவட்ட கருவூலத்திலிருந்து மேற்கூறிய முத்திரைத் தாள்களை போதிய அளவில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து சிதம்பரம் துணைக் கருவூல அலுவலக அதிகாரி கூறுகையில், ரூ.20, ரூ.50, ரூ.100 தொகைகளுக்கான முத்திரைத் தாள்களை வழங்கக் கோரி மாவட்ட கருவூலத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...