தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தண்ணீா் தொட்டியில் விழுந்த2 வயது சிறுவன் பலி

கீழ்பென்னாத்தூா் அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 2 சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தான்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:48 pm

DIN

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 2 சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தான்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த பெரிய ஓலைப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி (36), விவசாயி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மகன் ரட்சகன் (2) வீட்டுக்குப் பின்னால் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, அங்கிருந்த 4 அடி உயர தண்ணீா் தொட்டியில் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளான்.

ரட்சகனைக் காணாமல் பெற்றோா் தேடியபோது தண்ணீா் தொட்டியில் அவன் விழுந்து இருந்தது தெரியவந்தது.

மயங்கி நிலையில் இருந்த சிறுவனை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்துாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.