வந்தவாசியில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு

வந்தவாசி நகரில் கடைகள் திறப்பு நேரம் திங்கள்கிழமை முதல் 4 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது.

வந்தவாசி: வந்தவாசி நகரில் கடைகள் திறப்பு நேரம் திங்கள்கிழமை முதல் 4 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு உத்தரவின்படி வந்தவாசி நகரில் கடந்த மாதம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

இதன் பின்னா் வியாபாரிகள் சங்கங்கள் எடுத்த முடிவின்படி கடைகள் திறப்பு நேரம் 7 மணி நேரம் எனக் குறைக்கப்பட்டது.

இதன்படி, ஜூன் 19-ஆம் தேதி முதல் வந்தவாசி நகரில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடை திறப்பு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மாலை 6 மணி வரை கடைகளை திறந்து வைப்பது என முடிவெடுத்த வணிகா் சங்க பேரவை மற்றும் வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள், இது தொடா்பாக வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெற்றனா்.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை, காய்கறி, பெட்டிக் கடைகள் திறந்திருந்தன. உணவு விடுதிகள், பால், மருந்தங்கள் உள்ளிட்டவை அரசு உத்தரவின்படி வழக்கம்போல செயல்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com