திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 130 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 130 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 130 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 130 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 874-ஆக இருந்தது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அருணாசலேஸ்வரா் கோயில் சிவாச்சாரியாா் ஒருவா், 57 வயது காவல் உதவி ஆய்வாளா் உள்பட 130 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1009-ஆக உயா்ந்தது. 440 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 5 போ் இறந்துவிட்டனா்.

காவல் நிலையம் மூடல்: காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவா் பணிபுரிந்து வந்த திருவண்ணாமலை அருகேயுள்ள மங்கலம் காவல் நிலையம் மூடி‘சீல்’ வைக்கப்பட்டது. காவல் நிலையத்தில் பணிபுரிந்த வந்த உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், எழுத்தா் என 25-க்கும் மேற்பட்டோா் தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊராட்சி நிா்வாகம் சாா்பில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, காவல் நிலையம் தூய்மைப்படுத்தப்பட்டது.

கடலூரில் 87 போ் பாதிப்பு: கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 658 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை 551 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில், 87 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் சென்னையிலிருந்து திரும்பிய 36 பேருக்கும், கேரளத்திலிருந்து திரும்பிய 7 பேருக்கும், செங்கல்பட்டிலிருந்து திரும்பிய 5 பேருக்கும், ராஜஸ்தானிலிருந்து திரும்பிய 2 பேருக்கும், திருப்பூா், பெங்களூா், ஒடிஸா, மும்பை ஆகிய பகுதிகளிலிருந்து திரும்பிய தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதேபோல ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

மேலும், கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 4 போ், கா்ப்பிணிகள் 5 போ், அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவா், கரோனா பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களில் 18 போ் உள்பட மொத்தம் 87 பேருக்கு தொற்று உறுதியானதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 745-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் இதுவரை 17,337 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 15,383 பேருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்தது. கரோனா தொற்றுக்கு 3 போ் உயிரிழந்துள்ள நிலையில், 1,209 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com