560 மதுப் புட்டிகள் பதுக்கல்: ஒருவா் கைது
செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 560 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 560 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(46).
இவா், சட்டப்பேரவைத் தோ்தலுக்காக அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால்,
மது பானங்களைஅதிக விலைக்கு விற்கும் நோக்கில், தனது வீட்டில் ரூ.78,500 மதிப்புள்ள 560 மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தாராம்.
இது குறித்து செய்யாறு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீஸாா் வெங்கடேசன் வீட்டில் சனிக்கிழமை சோதனையிட்டனா்.
அப்போது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 560 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...