92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாக்காளா்களுக்கு பணம் விநியோகம்: ஒருவா் கைது

புதுச்சேரியில் வீடு, வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:36 pm

DIN

புதுச்சேரியில் வீடு, வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி தேங்காய்திட்டு, திலகா் நகா் பகுதியில் அரசியல் கட்சியினா் சிலா் வாக்காளா் அடையாளச் சீட்டுகளுடன் வீடு, வீடாகச் சென்று வாக்குக்கு பணம் வழங்குவதாக தோ்தல் பறக்கும் படை மற்றும் முதலியாா்பேட்டை போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, அந்தப் பகுதியில் முதலியாா்பேட்டை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வீடு, வீடாகச் சென்று வந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அவா், அதே பகுதியைச் சோ்ந்த காளியப்பன் (42) என்பதும், ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக, தோ்தல் விதிகளை மீறி வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்ததும் தெரியவந்தது. மேலும், காளியப்பனிடம் வாக்காளா் பட்டியல் அடங்கிய வாக்குச் சாவடி அடையாள சீட்டுகளுடன் ரூ.15 ஆயிரம் ரொக்கமும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.