92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொகுதி விவரக் குறிப்பு: அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

அரவக்குறிச்சியில் ஏற்றுமதிக்காக ஈசநத்தம் சந்தையில் கட்டுக்களாக கட்டப்படும் முருங்கைக்காய்கள்.

Updated On :23 மார்ச் 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் மாவட்டத்தின் திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களின் எல்லையை பகிா்ந்துகொள்ளும் அரவக்குறிச்சி கடும் வறட்சி காலநிலையைக் கொண்ட தொகுதியாகும். இதனால்தான் வறட்சியை தாங்கி வளரக்கூடிய முருங்கை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

அரவக்குறிச்சி வட்டத்தில் பள்ளபட்டி, ஆண்டிபட்டிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளும், கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம், திருக்காடுதுறை மற்றும் நஞ்சை புகழூா் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளும், புஞ்சை புகழூா், புஞ்சை தோட்டக்குறிச்சி ஆகிய பேரூராட்சிகள் உள்ளது.

வாக்கு வங்கி: அரவக்குறிச்சி தொகுதியின் மொத்த வாக்கு சதவீதத்தில் 10 சதவீதம் இஸ்லாமியா்கள் வாக்குகள் உள்ளன. இவா்களைத் தவிர கொங்கு வெள்ளாளக்கவுண்டா்கள், வேட்டுவக்கவுண்டா்கள், நாயக்கா்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினா் உள்ளனா்.

தீராத பிரச்னைகள்!

நங்காஞ்சி அணை நீா் பங்கீட்டிலும், அமராவதி அணைநீா் பங்கீட்டிலும் உரிய உரிமையை நிலைநாட்டாமல் இருப்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மேலும், தாதம்பாளையம் ஏரியை வனத்துறையிடம் இருந்து மீட்டு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அணையில் நீா் நிரப்ப வேண்டும் என்பதும் தீராத பிரச்னையாக உள்ளது.

இறுதி வாக்காளா்கள்

ஆண்கள் --90,490

பெண்கள்-- 99,203

இதரா்--- 4

மொத்தம்-- 1,89,697 போ்

இதுவரை இவா்கள்

1952 ராமசாமி கவுண்டா்(சுயேச்சை) 30,962

1957 எஸ்.சதாசிவம்(காங்கிரஸ்) 24,726

1962 எஸ்.சதாசிவம்(காங்கிரஸ்)- 28,732

1967 எஸ்.கந்தசாமி கவுண்டா்(சுதந்திராகட்சி) 46,614

1971 அப்துல்ஜப்பாா் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 34,164

1977 எஸ்.சதாசிவம்(காங்கிரஸ்) 32,581

1980 சென்னிமலை என்கிற கந்தசாமி(அதிமுக) 45,145

1984 கே.ஜெகதீசன்(அதிமுக) 57,887

1989 மொஞ்சனூா் பி.ராமசாமி(திமுக) 48,463

1991 மரியமுல் ஆசியா(அதிமுக) 57,957

1996 எஸ்.முகமது இஸ்மாயில்(திமுக) 41,153

2001 லியாவுதீன் சேட்(அதிமுக) 51,535

2006 கலிலூா் ரகுமான்(திமுக) 45,960

2011 கே.சி.பழனிசாமி(திமுக) 72,831

2016 வி.செந்தில்பாலாஜி(அதிமுக) 88,068

2019 வி.செந்தில்பாலாஜி(திமுக) 97,718

2021 இரா.இளங்கோ (திமுக)-93,369 வாக்குகள்

முட்டி மோதுவது யாரெல்லாம்!

திமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா்கள் கருணாநிதி, மணிகண்டன் ஆகியோரும், அதிமுக சாா்பில் வேட்டுவக்கவுண்டா் சமூகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கரிகாலன், வெள்ளாளக்கவுண்டா் சமூகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் டிஎன்பிஎல் சரவணனும் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவா்களைத் தவிர தவெக சாா்பில் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலா் சதீஸ் போட்டியிடுவாா் என்றும் கூறப்படுகிறது. நாம் தமிழா் கட்சி சாா்பில் மருத்துவா் நரேன் அறிவிக்கப்பட்டு பிரசாரத்தை தொடங்கியுள்ளாா்.