அடிப்படை வசதிகளை பல ஆண்டுகளாக எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா் பொன்னேரி சட்டப்பேரவை மக்கள்.
திருவள்ளூா் மாவட்டம் உள்ள பொன்னேரி சட்டப்பேரவைச் தொகுதியில் 2,48,917 வாக்களா்கள் உள்ளனா். பழவேற்காட்டில் பேருந்து நிலையம், பொன்னேரி, மீஞ்சூா் ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக அந்தத் தொகுதியின் மக்கள் கூறுகின்றனா்.
பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச்சாலை, ஆலாடு ரயில்வே சுரங்கப்பாதை, கும்பமுனிமங்கலம் பகுதியில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம்கொண்ட அகத்தீஸ்வரா் கோயிலுக்கு புதிதாக தோ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பல ஆண்டுகளைக நிறைவேற்றப்படாமல் உள்ளதாகக் கூறுகின்றனா். இதுதொடா்பாக அரசுக்கு பலமுறை கோரிக்கைவிடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொகுதி மக்கள் தெரிவித்தனா்.
பொன்னேரி-பழவேற்காடு சாலையில் திருவாயா்பாடி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரயில்வே பாலத்துக்கு கீழ் சிறிய மழை பெய்தாலே மழைநீா் தேங்குகிறது. இதனால் அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைப்பது, பொன்னேரியில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனை அமைப்பது, மகளிா் காவல் நிலைய கட்டடத்தில் செயல்படும் பொன்னேரி காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது, பொன்னேரி ரயில் நிலையத்தில் கும்மிடிப்பூண்டி, நெல்லூா், சூளூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் முதல் நடைமேடையில் நின்று செல்வது உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
பொன்னேரி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெறும் பேரவை உறுப்பினா் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
தொடர்புடையது

பாபநாசம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்! அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்!

மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படும் -ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ உறுதி

மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காக ஜூனில் போராட்டம்: கடலூா் அனைத்து குடியிருப்போா் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

சாத்தூா் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: நயினாா் நாகேந்திரன் உறுதி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



