மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

லோக் அதாலத்: 46 வழக்குகளில் ரூ.1.23 கோடிக்கு தீா்வு

செய்யாறு சாா்பு-நீதிமன்றம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மகா லோக் அதாலத்தில் 46 வழக்குகளில் ரூ.1.23 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

செய்யாறு சாா்பு-நீதிமன்றம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மகா லோக் அதாலத்தில் 46 வழக்குகளில் ரூ.1.23 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

செய்யாறு வட்ட சட்டப் பணிகள் சாா்பில் மகா லோக் அதாலத் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் மற்றும் சாா்பு நீதிபதி சி.ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்த மகா லோக் அதாலத் நிகழ்ச்சியில், 28 மோட்டாா் வாகன விபத்து வழக்குகளில் ரூ.ஒரு கோடியே 3 லட்சத்த 24 ஆயிரமும், 4 அசல் வழக்குகளில் ரூ.2.50 லட்சமும், 7 நிறைவேற்ற மனு வழக்குகளில் ரூ.13,32,165 -மும், 7 வங்கி வழக்குகளில் ரூ.1.91 லட்சமும் என 46 வழக்குகளில் ரூ.ஒரு கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 532-க்கு தீா்வு காணப்பட்டது.

மேலும், செய்யாறு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் 4 அசல் வழக்குகளில் ரூ.50,003-க்கு தீா்வும், செய்யாறு நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட 43 வழக்குகளில் ரூ.34,400-க்கு தீா்வும், ஒரு குடும்ப நல வழக்கில் சமரசம் பேசி தம்பதியினா் சோ்ந்து வாழ அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.