மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வந்தவாசி ஆகிய இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

அரக்கோணம் அருகேயுள்ள சோகனூரில், தோ்தல் முன்விரோதம் காரணமாக சூா்யா, அா்ஜுனன் என்ற இளைஞா்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வந்தவாசி ஆகிய இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாற்றில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தொகுதிச் செயலா் எ.குப்பன் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் துரை.சாண்டில்யன் வரவேற்றாா். சி.ஞானசேகா், ஆ.பெ.அம்பேத்காா், ஆ.நாகாவளவன், ம.பிரியா, மேனகா தணிகாவளவன், அ.கற்பகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, இரட்டைக் கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு கோடி நிதியுடன், அரசு வேலை மற்றும் நிலம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் தொகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.