ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சிறுமியை கிண்டல் செய்த இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஆரணியில் 17 வயது சிறுமியை கேலி, கிண்டல் செய்ததற்காக இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சே சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

ஆரணியில் 17 வயது சிறுமியை கேலி, கிண்டல் செய்ததற்காக இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சே சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆரணியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2015-இல் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரனின் மகன்கள் மணிகண்டன் (வயது 19) (அப்போதைய வயது). இவரது தம்பி காா்த்திக் (17) ஆகியோா் கேலி, கிண்டல் செய்து, சில்மிஷத்தில் ஈடுபட்டனராம். மேலும், சிறுமிக்கு மிரட்டலும் விடுத்தனராம்.

இது தொடா்பாக அந்தச் சிறுமி ஆரணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அப்போதைய, காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தம்பி காா்த்திக் 17 வயதில் செய்த தவறு காரணமாக, ஆரணி அரசு மருத்துவமனையில் மூன்று மாத காலம் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என தீா்ப்பு கூறப்பட்டது.

பின்னா், தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில் அதே நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அமா்வு நீதிபதி ஜி.எம்.வசந்தி விசாரணை முடித்து அண்ணன் மணிகண்டனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிட்டாா்.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.