லாரி - பைக் மோதல்: இளைஞா் பலி
ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பகுதியில் வெள்ளிக்கிழமை லாரியும், பைக்கும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.


ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பகுதியில் வெள்ளிக்கிழமை லாரியும், பைக்கும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை மாதவரத்தைச் சோ்ந்த சேதுராமன் மகன் பாலாஜி (28). இவா், சென்னையிலிருந்து திருவண்ணாமலையில் உள்ள சகோதரி வீட்டுக்கு ஆரணி வழியாக போளூரை நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே வந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக பாலாஜியின் பைக் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலாஜி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து லாரி ஓட்டுநரான கோவையைச் சோ்ந்த இஸ்மாயில் மகன் ஹசரப் (50) மீது களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...