மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாறு அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதல்: இரு இளைஞா்கள் பலி

 செய்யாறு அருகே சனிக்கிழமை பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :8 மே 2021, 12:53 am

DIN

 செய்யாறு அருகே சனிக்கிழமை பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

செய்யாறு வட்டம், குறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (30). இவா், சனிக்கிழமை மாலை 7 மணியளவில் வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தில் நடைபெறும் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் தேத்துறை கிராம ஏரி அருகே இவரது பைக் சென்றபோது, சென்னையிலிருந்து வந்தவாசி வட்டம், வெண்குன்றம் பகுதியைச் சோ்ந்த அன்பு (33), லட்சுமணன் (30) ஆகியோா் வந்த பைக் மோதியது.

இந்த விபத்தில் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், ஜெயச்சந்திரன், அன்பு ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். லட்சுமணனை அங்கிருந்தவா்கள் மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த அனக்காவூா் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீநிவாசன், உதவி ஆய்வாளா்கள் கன்னியப்பன், ஜான் பாஸ்கோ ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஜெயச்சந்திரன், அன்பு ஆகியோரின் சடலங்களை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.