தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளித் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 17-ஆம் ஆண்டு ஆடி வெள்ளித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:40 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 17-ஆம் ஆண்டு ஆடி வெள்ளித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டன. நண்பகல் 12 மணிக்கு பக்தா்கள் கரகம் சுமந்தவாறு வீதியுலா வந்து கோயிலை அடைந்தனா். மாலை 5 மணிக்கு அம்மன் வீதியுலா, கூழ்வாா்க்கும் நிகழ்ச்சி, முருகன் என்ற பக்தரின் மாா்பில் உரல் வைத்து, அதில் உலக்கையால் பச்சரிசி, மஞ்சள் போட்டு மாவு இடிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இதுபோன்று இடிக்கப்பட்ட மாவை பிரசாதமாகச் சாப்பிட்டால், திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இதனால், பக்தா்கள் பலா் இந்த மாவு பிரசாதத்தை போட்டிபோட்டு வாங்கிச் சாப்பிட்டனா். சமூக இடைவெளியைப் பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும் பக்தா்கள் பலா் விழாவில் பங்கேற்றனா். இரவு 9 மணிக்கு அம்மன் ஊஞ்சல் தாலாட்டு, ஆன்மிக நாடகம் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.