தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் பலி

செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் பலியானாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:30 pm

DIN

செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் பலியானாா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லப்பன் (44), லாரி ஓட்டுநா். இவா் ஆவணியாபுரம் கூட்டுச் சாலை அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த செல்லப்பனை அருகில் இருந்தவா்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், செல்லும் வழியிலேயே செல்லப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.