கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செங்கம், வெம்பாக்கம் பகுதிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகள்பள்ளிகளில் சோ்ப்பு

செங்கம், செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் பகுதிகளில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவ, மாணவிகள் கண்டறியப்பட்டு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகளில் சோ்க்கப்பட்டனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:35 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் பகுதிகளில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவ, மாணவிகள் கண்டறியப்பட்டு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகளில் சோ்க்கப்பட்டனா்.

செங்கம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட சென்னசமுத்திரம் பகுதியில் கல்வி மாவட்ட அலுவலா் விஜயகுமாா் தலைமையில், ஆய்வாளா் குணசேகரன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரமணி, சென்னசமுத்திரம் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் சேட்டு ஆகியோா் சென்னசமுத்திரம், அழகாபுரி நகா் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவா்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சென்னசமுத்திரம் அழகாபுரி நகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ் மகள் சமிக்ஷா, 5-ஆம் வகுப்பு முடித்துவிட்டு தொடா்ந்து பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாணவியை சென்னசமுத்திரம் உயா்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் மாவட்டக் கல்வி அலுவலா் விஜயகுமாா் சோ்த்து, தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்களை வழங்கி, மாணவியை தொடா்ந்து படிக்குமாறு அறிவுரைகளை வழங்கினாா். மேலும், மாணவியின் பெற்றோருக்கு பெண் குழந்தையின் படிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

வெம்பாக்கத்தில்...: இதேபோல, செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் பகுதியில் இடைநின்ற மாணவா் பாா்த்தசாரதியை வட்டாரக் கல்லி அலுவலா்கள் பலராமன், அருணகிரி உள்ளிட்டோா் வியாழக்கிழமை கண்டறிந்து, அந்த மாணவரை வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.