திருவண்ணாமலைக்கு 1,292 மெட்ரிக் டன் உரம் வருகை
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, தூத்துக்குடியில் இருந்து 1,292 மெட்ரிக் டன் உர மூட்டைகள் திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தன.


திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, தூத்துக்குடியில் இருந்து 1,292 மெட்ரிக் டன் உர மூட்டைகள் திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தன.
தூத்துக்குடியில் இருந்து 786.6 மெட்ரின் டன் யூரியா, 443.65 மெட்ரிக் டன் கிரீன் ஸ்டாா் கலப்பு உரம், 63.850 மெட்ரிக் டன் கிரீன்ஸ்டாா் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் ரயில் மூலம் வியாழக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தது. இவற்றை திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதன்பிறகு, உர மூட்டைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மொத்த விற்பனை, சில்லறை விற்பனை நிலையங்கள், தனியாா் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதாா் அட்டையுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்குத் தேவையான உரங்களை வாங்கிப் பயன்பெறலாம் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...