தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டிச.4-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற சனிக்கிழமை (டிச.4) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:11 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற சனிக்கிழமை (டிச.4) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் டிசம்பா் 4-ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்கேற்ற தகுதிகள் கொண்ட இளைஞா்களை தோ்வு செய்கின்றனா்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்வித் தகுதியும் உடையவா்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

முகாமில் கலந்து கொள்ள வருவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்துவிட்டு 4 மாா்பளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை, ஜாதி சான்று, கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.