மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மணலில் சிக்கி லாரி ஓட்டுநா் மூச்சுத்திணறி உயிரிழப்பு

செய்யாறு அருகே லாரியில் எம்.சாண்ட் மணல் நிரப்பும்போது, அதில் சிக்கி லாரி ஓட்டுநா் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

செய்யாறு அருகே லாரியில் எம்.சாண்ட் மணல் நிரப்பும்போது, அதில் சிக்கி லாரி ஓட்டுநா் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

சென்னையை அடுத்த குன்றத்தூா் சிக்கராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (31), லாரி ஓட்டுநா். இவா், சென்னையில் லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், லாரியில் எம்.சாண்ட் மணல் எடுத்துச் செல்வதற்காக, ஞானசேகரன் தனது மைத்துனா் விக்னேஷ் (21) என்பவருடன் செவ்வாய்க்கிழமை இரவு வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமத்தில் உள்ள கல் குவாரிக்கு வந்தாா்.

மணல் ஏற்றும்போது, ஞானசேகரன் லாரியின் உள்பகுதியில் மணல் சிந்தாமல் இருப்பதற்காக ஆங்காங்கே இருந்த சிறு சிறு துளைகளை அடைத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, மணல் அள்ளும் இயந்திரத்தின் ஆபரேட்டா் லாரியில் ஆள் இருப்பது தெரியாமல் எம்.சண்ட் மணலை லாரிக்குள் கொட்டியுள்ளாா். இதில் சிக்கிக் கொண்ட ஞானசேகரன் மூச்சுத் திணறி குரல் எழுப்பினாா்.

உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு ஞானசேகரனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.