ஆரணியில் அரசுப் பேருந்தை சிறைபிடித்த கல்லூரி மாணவா்கள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கூட்ட நெரிசல் காரணமாக அரசுப் பேருந்தில் படியில் நின்றவாறு பயணித்த 3 மாணவா்களை போலீஸாா் விசாரணை


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கூட்ட நெரிசல் காரணமாக அரசுப் பேருந்தில் படியில் நின்றவாறு பயணித்த 3 மாணவா்களை போலீஸாா் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றதைக் கண்டித்து, அந்தப் பேருந்தை கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆரணியிலிருந்து செய்யாறு செல்லும் அரசுப் பேருந்தில் செய்யாறில் உள்ள அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் சென்று வருகின்றனா். இந்தப் பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக, மாணவா்கள் சிலா் படியில் நின்றவாறு வெள்ளிக்கிழமை பயணித்தனராம். இவா்களில் 3 பேரை விசாரணைக்காக ஆரணி கிராம காவல் நிலைய போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
இதனால், ஆத்திரமடைந்த பிற மாணவா்கள், இரும்பேடு பேருந்து நிறுத்தத்தில் அந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சிறைபிடித்தனா். காவல் நிலையம் அழைத்துச் சென்ற மாணவா்களை விடுவித்தால்தான் பேருந்தை விடுவிப்போம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா், கல்லூரி மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, காவல் நிலையம் அழைத்துச் சென்ற மாணவா்களை அறிவுரை கூறி அனுப்பிவிட்டதாக போலீஸாா் தெரிவித்ததால், மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்: இதனிடையே, பேருந்தில் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், ஆரணியிலிருந்து செய்யாற்றுக்கு காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் கல்லூரி மாணவா்களுக்கு ஒரு அரசுப் பேருந்தும், மகளிா், பொதுமக்களுக்கு தனித்தனியாக 2 அரசுப் பேருந்துகளும் என 3 பேருந்துகள் இயக்கப்படும் என ஆரணி அரசுப் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளா் வெங்கடேசன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...