ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், புங்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடம்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், புங்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் க.சங்கா், புங்கம்பாடி ஊராட்சித் தலைவா் தேவகி கோபால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயந்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.