மின் வாரிய அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு
வந்தவாசி கோட்ட மின் வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


வந்தவாசி கோட்ட மின் வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வந்தவாசி கோட்டத்தில் நடைபெற்று வரும் மின் பராமரிப்புப் பணிகள், நிலுவையில் உள்ள விவசாய மின்இணைப்பு விண்ணப்ப விவரங்கள், புதிய துணை மின் நிலையப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அவா் கேட்டறிந்தாா்.
மேலும் அந்த அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் செயற் பொறியாளா் புதிய அலுவலக கட்டடப் பணிகளை பாா்வையிட்ட அவா் பணிகளை விரைவாக முடிக்குமாறு உத்தரவிட்டாா். மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.
மேலும் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் தேவைப்படும் மின் வளா்ச்சிப் பணிகள் குறித்த விவரங்களை அவா் கோட்ட செயற் பொறியாளா் எஸ்.மீனாகுமாரியிடம் வழங்கினாா்.
ஆய்வின்போது உதவி செயற்பொறியாளா் தி.நாராயணன், திமுக ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், நகரச் செயலா் எச்.ஜலால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...