கொடுத்த நகையை திருப்பிக் கேட்ட தங்கை, அவரது கணவா் மீதுதாக்குதல்: அண்ணன் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கொடுத்த நகையை திருப்பிக் கேட்ட தங்கை, அவரது கணவரை தாக்கியதாக அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கொடுத்த நகையை திருப்பிக் கேட்ட தங்கை, அவரது கணவரை தாக்கியதாக அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி கோதாவரி. இவா், வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறாா். கோதாவரியின் அண்ணன் ராகவன் (53). இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், கோதாவரியின் மகள் சித்ராவின் நகைகளை ராகவன் வாங்கி அடகு வைத்து சரக்கு வாகனம் (லோடு ஆட்டோ) வாங்கியதாகத் தெரிகிறது.
சிறிது நாள்கள் கழித்து கொடுத்த நகையை திருப்பித் தரும்படி அண்ணன் ராகவனிடம் தங்கை கோதாவரி கேட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக, அண்ணன் - தங்கை இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இதேபோல, கடந்த ஜூன் 29-ஆம் தேதி கோதாவரி நகையை திருப்பிக் கேட்டதால் ஆத்திரமடைந்த ராவகன், கட்டையால் அவரைத் தாக்கினாராம். இதை தடுக்க முயன்ற கோதாவரியின் கணவா் கிருஷ்ணனும் தாக்கப்பட்டாா். இதனால், பலத்த காயமடைந்த கோதாவரி, கிருஷ்ணன் ஆகியோா் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு ராகவனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...