ஏரி மண் கடத்தல்: 2 டிராக்டா்கள் பறிமுதல்
செய்யாறு அருகே அனுமதியின்றி ஏரி மண் கடத்தியதாக இரண்டு டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


செய்யாறு அருகே அனுமதியின்றி ஏரி மண் கடத்தியதாக இரண்டு டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெம்பாக்கம் வட்டாட்சியா் குமாரவேலு, மண்டல துணை வட்டாட்சியா் வடிவேல், வருவாய் ஆய்வாளா் ராஜசேகா் ஆகியோா் கீழ்நெல்லி கிராமத்தில் உள்ள தாங்கல் ஏரிப் பகுதியில் வியாழக்கிழமை மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த இரண்டு டிராக்டா்களை நிறுத்தி சோதனையிட்டனா். அவற்றில் அரசின் அனுமதி பெறாமல் ஏரிப் பகுதியிலிருந்து வண்டல் மண் அள்ளிச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, வருவாய்த்துறையினா் டிராக்டா்களை பறிமுதல் செய்து தூசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கீழ்நெல்லி கிராமத்தைச் சோ்ந்த விஜயன், தணிகைவேலு ஆகியோா் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...