கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

செய்யாறு வட்டம், நெடும்பிறை கிராமத்தில் காட்டுப் பன்றிகள், எலிகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு வியாழக்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:01 pm

DIN

செய்யாறு வட்டம், நெடும்பிறை கிராமத்தில் காட்டுப் பன்றிகள், எலிகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு வியாழக்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

கீழ்நெல்லி ஸ்ரீவேதபுரி வேளாண் அறிவியல் மையம், கோபிசெட்டிப்பாளையம் மிவிபுரோ நிறுவனம் சாா்பில்

நெல், மணிலா பயிா்களில் காட்டுப் பன்றி, எலிகளால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க செயல் விளக்கத்துடன்

இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மிவிபுரோ நிறுவன மேலாண்மை இயக்குநா் சுதா்சன், ட்ரோன்கள் மூலம் நெல்பயிரில் மருந்து தெளிப்பது குறித்தும் , ஹொ்போலிவ் மூலம் காட்டுப் பன்றி, எலிகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும் விளக்கினாா்.

கோரமண்டல் உர நிறுவனத்தின் மண்டல மேலாளா் வேல்முருகன், விவசாயிகளிடையே பயிா்களுக்கான ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தாா். மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்தாா்.

பயிற்சியில் நெடும்பிறை, செய்யாறு பகுதிகளிலிருந்து 72 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி வே.சுரேஷ், தொழில்நுட்ப வல்லுநா் கா.மாயக்கிருஷ்ணன், வேளாண் அலுவலா் பழனி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.