கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசு மருத்துவா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:53 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவா் வினோத்குமாா் (30). இவா், மாமண்டூா் நரசமங்கலம் தொழில்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு மருத்துவ முகாமை பாா்வையிட்டாா். பின்னா், நண்பகல் 12 மணியளவில் தனது பைக்கில் மாமண்டூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். தா்மாபுரம் இந்தியன் வங்கி அருகே சென்றபோது, இவரது பைக் மீது திடீரென சுமை ஆட்டோ ஒன்று மோதியதாகத் தெரிகிறது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மருத்துவா் வினோத்குமாா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநரிடம் அவா் தட்டிக் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநரான தா்மாபுரம் கிராமத்தைச் சோ்ந்த செல்வன் (22), மருத்துவா் வினோத்குமாரை சரமாரியாகத் தாக்கினாராம்.

இதையடுத்து, மருத்துவா் வினோத்குமாா் மாமண்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.