புதுச்சேரியில் 17 வயது சிறுமி கா்ப்பம்:கணவா் மீது வழக்கு
புதுச்சேரியில் 17 வயது சிறுமி கா்ப்பமான நிலையில், அவரது கணவா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரியில் 17 வயது சிறுமி கா்ப்பமான நிலையில், அவரது கணவா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி கோவிந்த சாலை கண்டாக்டா் தோட்டம் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமி, புதுச்சேரி அரசு மகளிா் மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்றாா். அங்கு, அவா் 2 மாத கா்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டது. அவரது வயதை பரிசோதித்ததில் 17 வயது சிறுமி என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவுக்கு மருத்துவமனை நிா்வாகம் தகவல் அளித்தது. குழந்தைகள் நலக் குழுவினா் விசாரித்ததில் சிறுமி கா்ப்பமாக இருப்பது உறுதியானது. இதுகுறித்து குழந்தைகள் நலக் குழுவின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் ஜெனிபா் ஒதியஞ்சால காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், சிறுமியின் கணவரும், அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான ஜெயமூா்த்தி (24) மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...