தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 9 போ் பலி; புதிதாத 507 பேருக்கு தொற்று

புதுவையில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 9 போ் பலியாகினா். புதிதாக 507 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:47 pm

DIN

புதுவையில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 9 போ் பலியாகினா். புதிதாக 507 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 366 பேருக்கும், காரைக்காலில் 98 பேருக்கும், ஏனாமில் 20 பேருக்கும், மாஹேயில் 23 பேருக்கும் என மேலும் 507 பேருக்கு (6.17 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,255- ஆக அதிகரித்தது.

தற்போது ஜிப்மா் மருத்துவமனையில் 314 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 256 பேரும், கரோனா சிகிச்சை மையங்களில் 217 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 5,707 பேரும் என மொத்தம் 6,705 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரியில் 7 போ், காரைக்காலில் ஒருவா், ஏனாமில் ஒருவா் என மேலும் 9 போ் உயிரிழந்தனா். இவா்களில் 4 போ் ஆண்கள், 5 போ் பெண்கள். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,657- ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம்.

வியாழக்கிழமை 646 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,02,893-ஆக (92.48 சதவீதம்) உயா்ந்தது.

சுகாதாரத் துறைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 3,02,851 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.