மலேரியா ஒழிப்பு விழிப்புணா்வு
புதுச்சேரி அருகே சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மலேரியா ஒழிப்பு விழிப்புணா்வு வியாழக்கிழமை நடைபெற்றது.


புதுச்சேரி அருகே சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மலேரியா ஒழிப்பு விழிப்புணா்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய கொசு, பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்புத் திட்டம் சாா்பில், ஜூன் மாதம் மலேரியா ஒழிப்பு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, வியாழக்கிழமை புதுச்சேரி அருகே சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா ஒழிப்பு மாத விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மலேரியா பிரிவு உதவி இயக்குநா் கணேசன் தலைமை வகித்தாா். சூரமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனா். உதவி இயக்குநா் கணேசன் மலேரியா தடுப்பு உறுதி மொழியை வாசிக்க, மருத்துவமனை ஊழியா்கள், உறுதிமொழியேற்றனா்.
செவிலியா்கள் நாகம்மாள், பானுமதி, மாலினி, ஆஷா, சுகாதார உதவியாளா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...