கல்லூரி மாணவி தற்கொலை: போலீஸாா் விசாரணை
செய்யாறு அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


செய்யாறு அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்யாறு வட்டம், புரிசை கிராமம் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன். காவலாளியாக பணியாற்றி வருகிறாா்.
இவரது மகள் கன்னியம்மாள்(19). இவா், அனக்காவூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகத் தெரிகிறது.
தாமோதரன் வேலைக்குச் சென்ற நிலையில், அவரது மனையும், மகனும் செவ்வாய்க்கிழமை திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பினா்.
அப்போது வீட்டில் இருந்த கன்னியம்மாள் காணாமல் போகவே அக்கம் பக்கத்தில் தேடினா்.
அப்போது, மரத்தில் மகள் கன்னியம்மாள் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து தாமேதரன் அனக்காவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கன்னியப்பன் வழக்குப் பதிவு செய்தாா்.
தாமோதரன் அளித்த புகாா் மனுவில், மகள் கன்னியம்மாளுடன் தென்இலுப்பை கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் நட்பாக பேசி வந்ததாகவும், அவா்தான் தனது மகளின் மரணத்துக்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.
மேலும், அந்த இளைஞா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
தகவல் அறிந்த செய்யாறு டி.எஸ்.பி. (பொ) சுரேஷ் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து கூடியிருந்தவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...