கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கூலித் தொழிலாளா் குடும்பங்களுக்கு நிவாரணம்

செய்யாறு வட்டம், வடதிண்ணலூா் கிராமத்தில் 50 கூலித் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:05 pm

DIN

செய்யாறு வட்டம், வடதிண்ணலூா் கிராமத்தில் 50 கூலித் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கரோனா பொது முடக்கத்தால், வடதிண்ணலூரில் வசிக்கும் கூலித் தொழிலாளா்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் பல மாதங்களாக கிராமத்திலேயே முடங்கி வாழ்வாதாரமின்றி தவித்து வந்தனா்.

இதை அறிந்த செய்யாறு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் அவா்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்களை வழங்க முன் வந்தது.

இதையடுத்து, வடதிண்ணலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.பாா்த்தசாரதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் பங்கேற்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரு.1500 மதிப்பிலான அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினா்.

நிகழ்ச்சியில் சங்க பயிற்றுநா் எஸ்.ஏ.அன்வா்பெய்க், உறுப்பினா்கள் என்.நடராஜன், மகாலட்சுமி தாமோதரன், ஒன்றியக் குழுத் தலைவா் ஏ.அருணாசலம், ஒன்றிய உறுப்பினா் மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.