தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுவையில் சிறப்பு தடுப்பூசி முகாம்: குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவிப்பு

புதுவையில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

புதுவையில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால், அதை மேலும் தீவிரப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக்க் கூட்டம் சுகாதாரத் துறை செயலா் அருண் தலைமையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் இ.வல்லவன், உதயகுமாா், சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா், அனைத்துத் துறை செயலா்கள், இயக்குநா்கள், சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள், குறைதீா் மற்றும் மண்டல அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தடுப்பூசி சிறப்பு முகாமை மேலும் இரண்டு நாள்களுக்கு (அதாவது ஜூன் 21 -ஆம் தேதி வரை) நீட்டிப்பது, 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய முதல் 10 கிராமங்களுக்கு விருது வழங்குவது, நாளொன்றுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 25 அதிருஷ்டசாலிகளுக்கு 6 நாள்களிலும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

இதேபோல, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சிகள் எடுத்த ஒரு பிளாக்குக்கு 2 அங்கன்வாடி ஊழியா்கள் வீதம் 10 சிறந்த அங்கன்வாடி ஊழியா்களுக்கும், 5 சிறந்த பஞ்சாயத்து அளவிலான பெடரல் ஊழியா்களுக்கும், 5 சிறந்த ஆஷா பணியாளா்களுக்கும், 5 சிறந்த தூய்மைப் பணியாளா்களுக்கும், 5 சிறந்த களப்பணிக் குழுவினருக்கும், 5 சிறந்த ஆரம்ப சுகாதார மையங்களுக்கும், 5 தன்னாா்வலா்களுக்கும், தனி நபா்களுக்கும் பரிசுத் தொகையுடன், சான்றிதழ்களை வழங்கி கௌரவிப்பது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.