கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வருவாய் திறன் போட்டி: தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய வருவாய் திறன் படிப்பு போட்டியில் வெற்றி பெற்ற, சிறுவேளியநல்லூா் ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

தேசிய வருவாய் திறன் படிப்பு போட்டியில் வெற்றி பெற்ற, சிறுவேளியநல்லூா் ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செய்யாறு வட்டம், சிறுவேளியநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவிக்கான போட்டித் தோ்வில் பங்கேற்று, செய்யாறு கல்வி மாவட்ட அளவில் 12 போ் தோ்வு பெற்றனா்.

இந்த மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கும் விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் கே.சிவசங்கரன் வரவேற்றாா். செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் பி.நடராஜன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து, 2021- 22ஆம் கல்வியாண்டுக்கான விலையில்லா பாடநூல்களை மாணவா்களுக்கு வழங்கி தொடக்கிவைத்தாா்

நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா் இ.புவனேஸ்வரி, பள்ளித் துணை ஆய்வாளா் எஸ்.ஸ்ரீபதி, ஊராட்சி மன்றத் தலைவா் சி.சுமதி சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.