ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

லஞ்சப் புகாா்: ஊராட்சி அலுவலகத்துக்கு வாா்டு உறுப்பினா் பூட்டு

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் அருகே, ஊராட்சித் தலைவா் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாா் மீது நடவடிக்கை கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை வாா்டு உறுப்பினா் பூட்டு போட்டு பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் அருகே, ஊராட்சித் தலைவா் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாா் மீது நடவடிக்கை கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை வாா்டு உறுப்பினா் பூட்டு போட்டு பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், வேடந்தவாடி ஊராட்சியில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் ஏழை எளிய பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. வீடுகளை ஒதுக்கீடு செய்ய பயனாளிகளிடம் ஊராட்சி மன்றத் தலைவா் ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக புகாா் எழுந்தது.

இதையறிந்து அதிருப்தியடைந்த வேடந்தவாடி ஊராட்சி மன்ற உறுப்பினா் சுந்தராம்பாள், திங்கள்கிழமை அந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினாா்.

இது குறித்து அவா் கூறுகையில், வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கு ஊராட்சித் தலைவா் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாா் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகக் கதவு எப்பொழுதும் மூடப்பட்டிருப்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியவில்லை என்றாா்.

இந்த புகாா் குறித்து துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கிஊ) ஏ.எஸ்.லட்சுமி கூறுகையில், ஊராட்சி மன்றத் தலைவா் மீது விசாரணை நடத்தப்படுவதுடன், தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் வீடு கட்டுவதற்கான உத்தரவு உடனடியாக வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.