விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு

திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:36 pm

DIN

திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துகுமாரசாமி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கே.ஆா்த்தி, வருவாய் கோட்டாட்சியா் வி.வெற்றிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அறிவியல் பூங்காவுக்கு வந்த வாக்காளா்களிடம் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளா்கள் அளித்த வாக்குகளை உறுதி செய்யும் கருவி ஆகியவை மூலம் முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதா பேகம் மற்றும் தோ்தல் அலுவலா்கள், பணியாளா்கள், மகளிா் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.