சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர்!
தேர்தல் நேர வாக்குறுதி மற்றும் கூட்டணி அமைவதை பொருத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.


திருவள்ளூர் நகராட்சி மற்றும் 108 வைணவத் தலங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோயில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை அலுவலகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்டவைகளை கொண்டது திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியாகும்.
அதுமட்டுமின்றி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சென்னையின் குடிநீர்த் தேவையை கணிசமாக பூர்த்தி செய்யக்கூடிய பூண்டி நீர்த்தேக்கம் ஆகியவையும் இந்த தொகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இடம் பெற்றுள்ள பகுதிகள்: திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதி, மாவட்டத் தலைநகரான திருவள்ளூர், திருவள்ளூர் வட்டத்தின் பெரும்பகுதி மற்றும் திருத்தணி வட்டத்தின் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகள் அடங்கியதாகும்.
திருவள்ளூர் வட்டத்தில் அட்சன்புரம், பிளேஸ்பாலையம், கெங்குளுகண்டிகை, அல்லிக்குழி, கிரீன்வேல்நத்தம், சென்றாயன்பாலையம், தோமூர், திருப்பேர், அரும்பாக்கம், ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், பூண்டி, கண்ணம்மாபேட்டை, மூவூர், நெய்வேலி, இராமதண்டலம், செயஞ்சேரி, எறையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், ராமஞ்சேரி, காரனிசாம்பேட்டை, குன்னவலம், பட்டரைபெரும்புதூர், கனகவல்லிபுரம், பாண்டூர், திருப்பாச்சூர், திருவள்ளூர், பிரையாங்குப்பம், பள்ளியரைக்குப்பம், காரணை, ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், கீழ்விளாகம், மேல்விளாகம், கலியனூர், விடையூர்,
வெண்மனம்புதூர், கடம்பத்தூர், ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், கொப்பூர், நயம்பாக்கம், பாப்பரம்பாக்கம், வலசைவெட்டிக்காடு, எல்லுப்பூர், போளிவாக்கம், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர், அகரம், பானம்பாக்கம், ராமன் கோயில், மடத்துக்குப்பம், செஞ்சி,தென்காரணை, சிற்றம்பாக்கம், காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, எறையாமங்கலம், அழிஞ்சிவாக்கம், மப்பேடு, கீழ்ச்சேரி, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரஞ்சேரி, கூவம், பிள்ளையார்குப்பம், கோவிந்தமேடு, உளுந்தை, தொடுகாடு, வயலூர், கொட்டையூர், காரணை, கல்லம்பேடு, உத்தரம்பாக்கம், கண்ணூர், புதுப்பட்டு, சேலை மற்றும் திருப்பந்தியூர் கிராமங்கள். திருவள்ளூர் நகராட்சி மற்றும் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சி.
திருத்தணி வட்டத்தில் அருங்குளம், மாமண்டூர், அரும்பாக்கம், குப்பம், ஆற்காடு, நெடம்பரம், பணப்பாக்கம், கூளூர், காஞ்சிப்பாடி, முத்துகொண்டபுரம், இலுப்பூர், நாபளூர், ராமாபுரம், காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம், திருவாலங்காடு, வியாசாபுரம், பழையனூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மபுரம், மணவூர், கபுலகண்டிகை, மருதவள்ளிபுரம், அரிச்சந்திரபுரம், ஜே.எஸ்.ராமபுரம், பெரிகளகத்தூர், ஒரத்தூர், லக்ஷ்மிவிலாஸபுரம், பாகசாலை, சின்னமண்டலி மற்றும் களம்பாக்கம் கிராமங்கள்.
சமூக வாக்குகள்: இத்தொகுதியில் தாழ்த்தப்பட்டோர், வன்னியர் கணிசமாகவும், அதற்கடுத்த நிலையில் நாயுடு, முதலியார், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு சமுதாய அளவிலான வாக்குகள் சம அளவில் இருந்தாலும், தேர்தல் நேர வாக்குறுதி மற்றும் கூட்டணி அமைவதை பொருத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.
திருவள்ளூர் தொகுதியின் ஒரு பகுதி, நகர்ப்பகுதியாக உள்ளதால் வணிக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இத்தொகுதியின் முக்கிய தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. அதனால் நெல், கரும்பு, வாழை, மணிலா, மா மற்றும் கொய்யா உள்ளிட்ட பழப்பயிர்களும் அதிகளவில் சாகுபடி செய்யும் பகுதியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...