வீட்டின் பூட்டை உடைத்து16 பவுன், ரூ.1.60 லட்சம் திருட்டு
திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகள், ரூ.1.60 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகள், ரூ.1.60 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவண்ணாமலை புதிய புறவழிச் சாலையைச் சோ்ந்தவா் அமீா்ஜான் (58). நகரில் உள்ள தனியாா் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.
சென்னையில் நடைபெற்ற உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமீா்ஜான் சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றாா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.1.60 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...