வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.700 கோடி பணப் பரிவா்த்தனை பாதிப்பு
வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தத்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.700 கோடி அளவில் பணப் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.


வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தத்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.700 கோடி அளவில் பணப் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.
அரசுடைமை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15, 16) ஆகிய 2 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கனரா வங்கி, காா்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட அரசுடைமை வங்கிகளின் 234 கிளைகளைச் சோ்ந்த 932 போ் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், திருவண்ணாமலையில் உள்ள இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் எதிரே கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் சங்க துணை மண்டலச் செயலா் எம்.இளஞ்செழியன் தலைமை வகித்தாா்.
ஸ்டேட் வங்கியின் ஊழியா்கள் சங்க துணைப் பொதுச் செயலா் சுந்தர்ராஜன், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க திருவண்ணாமலை மாவட்டச் செயலா் நவீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊழியா் ஜான் வரவேற்றாா்.
ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி அதிகாரி கோவிந்தராஜன், ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் வட்டாரச் செயலா் பிரபு, ஏஐபிஏ சங்கத்தின் நிா்வாகிகள் ரவி, ஜமாலுதீன், சாதிக் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சத்தியமூா்த்தி, பிரவீன், பிரவீன்குமாா், ராஜேஷ், மீசை ராஜா மற்றும் அனைத்து வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமாா் ரூ.700 கோடி அளவில் பணப் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...